திருப்பத்தூர்- புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் பாஜகவின் கொடிகம்பம் விழுந்தது ஒருவர் படுகாயம்


திருப்பத்தூர்: திருப்பத்தூர்- புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் பாஜகவின் கொடிகம்பம் விழுந்தது ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அண்ணாமலையை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர இரும்பு கொடிக்கம்பம் கலீல் என்பவர் தலையில் விழுந்தது. இதில் ஆருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கொடி கம்பம் விழுந்தது படுகாயமடைந்தவரின் தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

கொடிகம்பம் விழுந்தது படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு கூடியிருந்தவர்கள் முன்வரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த கலீல் என்பவர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என்மக்கள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணமானது திருப்பத்தூர் புதுப்பேட்டை கூட்டுசாலையில் இருந்து பஸ் நிலையம் வரை 1 கி.மீ வரை நடந்து வந்திருக்கிறார்கள். ஏராளமான பாஜகவினர் குவிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அண்ணாமலை பயணத்தை தொடர்ந்தார்.

அண்ணாமலையை வரவேற்பதற்காக திருப்பத்தூர் சாலையில் அனுமதியின்றி கொடிக்கம்பம், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுப்பேட்டை கூட்டுசாலையில் இந்த நடைபயணம் மேற்கொண்ட போது அங்கிருந்த 50 அடி நிலம் கொண்ட கொடிகம்பம் பொதுமக்கள் மீது விழுந்தது. இந்த கொடிக்கம்பம் விழுந்ததில் கலீல் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்தது மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து ஏற்பட்டாலும் தனது நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். இந்த கொடிக்கம்பம் விழுந்தும் கண்டுகொள்ளாமல் தனது நடைபயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை மீது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!