திருப்பாலைக்குடி, உப்பூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி செம ஜோர்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி சம்பை, உப்பூர் பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு விளைச்சல் அமோகமாக நடைபெறுகிறது. தற்போது பாத்திகளில் விளைந்த உப்புக்களை சேகரிக்கும் பணியில் உப்பளத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கக்கூடிய உப்பு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. குறிப்பாக மீன் பதப்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிகமாக வாங்குகின்றனர். கடந்த ஆண்டு சில பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உப்பு சேகரிப்பு பணியில் சேர்ந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இனிவரும் காலங்களில் உப்பளங்களில் விளையக்கூடிய உப்பை, அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என உப்பள உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்