கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது திருப்பதியில் திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் நேற்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசன வரிசைகளுக்கு செல்லும் முன்பு திருநாமம் வைக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக திருநாமம் வைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அந்த திட்டத்தை செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கும் ஏ.டி.சி. சந்திப்பு நுழைவில் பக்தர்களுக்கு வாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் திருநாமம் வைக்கப்பட்டது.

 

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை