நாளை மறுதினம் பிரம்மோற்சவம் தொடக்கம் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த ‘லொகேஷன் க்யூஆர்கோடு’

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மறுநாள் தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை 8ம் தேதி நடக்க உள்ளது. இதனைகாண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆனால் திருமலையில் போதிய வாகன நிறுத்த வசதி இல்லாததால் திருப்பதியில் அலிபிரி லிங்க்பஸ் ஸ்டாண்ட், இந்திரா மைதானம், நேரு விளையாட்டு மைதானம், அலிபிரி சாலையில் உள்ள தேவ்லோக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே திருமலையில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு பார்க்கிங்கில் நிறுத்தப்பட உள்ளது. அதன்பிறகு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம் திருப்பதியில் எந்தெந்த பகுதியில் காலியாக உள்ளது என அதிகாரிகள் அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

எனவே காலியாக உள்ள இடத்தில் பக்தர்கள் சுலபமாக தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு, அங்கிருந்து அரசு பஸ்சில் திருமலைக்கு செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நகரின் பல்வேறு இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடங்களை காணும் வகையிலான ‘லொகேஷன் க்யூ ஆர் கோடு’ டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

அதில், எந்த இடத்தில் உள்ள பார்க்கிங்கில் காலியாக இடம் உள்ளது என அதிகாரிகள் அறிவிப்பார்கள். அதற்கு ஏற்ப பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பார்க்கிற்கு சென்று தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். அதே இடத்தில் இருந்து திருமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஆர்டிசி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.4.23 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 69,300 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 21,884 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.23 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 16 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

In Tirumala Tirupathi Brahmotsavam Starting Day After Tomorrow. For Parking Log into QR Code

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்