திருச்செந்தூர் கோயிலில் தடை மீறி செல்போனில் படம் பிடித்த தமிழிசை

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பஞ்சலிங்க சுவாமிகளையும் வழிபட்டார். இந்நிலையில் அவரது முகநூல் வலைதளத்தில் திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ததை குறிப்பிட்டு பஞ்சலிங்க சுவாமிகள் முன்பு நின்று எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கவர்னராக இருந்து கொண்டு செல்போனில் புகைப்படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாக பஞ்சலிங்க சுவாமிகள் பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலின் விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால், கவர்னரே விதிமுறைகளை மீறுவது, எந்த விதத்தில் நியாயம்? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது