திருச்செந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம்.. தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே மக்களுக்கு அறிவுறுத்தல்!!

நெல்லை: திருச்செந்தூர் – நெல்லை இடையே ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. கடந்த மாதம் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில் நிலையங்கள் மழைநீரால் சூழப்பட்டன. மேலும், ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. திருச்செந்தூர் – நெல்லை இடையிலான ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் – நெல்லைக்கு இடையே உள்ள தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை முழுவதும் சேதமடைந்த காரணத்தால் திருச்செந்தூர் – நெல்லை போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே சீரமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது. அதன்படி இன்று 11 மணிக்கு நெல்லையில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே முற்பகல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தண்டவாளத்தை மக்கள் கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவுத்தியுள்ளது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை