சுற்றுலா வாகன நிறுத்தமான தீர்த்தமலை பஸ் ஸ்டாண்ட்


அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் கோயில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அத்துடன் திருவண்ணாமலை பஸ்களும், இந்த வழியாக சென்று வருகிறது. சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, கடந்த 2013ம் ஆண்டு ₹17 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், ‘பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் அரசு, தனியார் பஸ்கள் சாலையிலேயே நின்று செல்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்க நேரிடுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு