டயர் வெடித்து ஆம்னி பஸ், கார் தீப்பிடித்து எரிந்து நாசம்: 34 பேர் உயிர் தப்பினர்

திருச்சி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ் சென்னை புறப்பட்டது. இந்த பஸ்சை சாத்தூரை சேர்ந்த டிரைவர் அழகுராஜ் (30) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக தூத்துக்குடியை சேர்ந்த மாரீஸ் (30) உடனிருந்தார். இதில் 28 பேர் பயணித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பஸ் வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பஸ், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் பாலத்தின் மீது ஏறி சென்றது.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பஸ்சின் முன்புற டயர் வெடித்ததில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அழகுராஜ், உடனடியாக மேம்பாலத்திலேயே பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் வேக வேகமாக கீழே இறக்கப்பட்டனர். பஸ்சின் பக்கவாட்டில் இருந்த வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளை எடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

கார் எரிந்து நாசம்: சென்னையை ேசர்ந்தவர் பாலச்சந்தர்(27). இவரது மனைவி இலக்கியா(26). பாலச்சந்தரின் நண்பர் அன்வர்அலி(27). இவரது மனைவி பசிலா(23). தூத்துக்குடியில் உள்ள நண்பர் வீட்டுக்கு விசேஷசத்துக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து காரில் 4 பேரும் சென்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மோரணிமலை அருகே கார் சென்றபோது டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் கார் தீ பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் காரில் பயணம் செய்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்