சென்னை – ராஜஸ்தான் போட்டிக்கு டிக்கெட் இன்று விற்பனை

சென்னை: ஐபிஎல் தொடரில் ஏப்.12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சென்னை-ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட்களை காலை 9.30 மணி முதல் ரசிகர்கள் வாங்கலாம். முதல் ஆட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தொடர்கிறது. நேரடி விற்பனைக்காக 2 விற்பனை மையங்கள் சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் செயல்படும். சி, டி, இ கீழ் அடுக்குகளுக்கான கட்டணம் ரூ.1500. இந்த டிக்கெட்கள் நேரடியாக மட்டும் விற்பனை செய்யப்படும். அதேபோல் டி, இ மேலடுக்குகளுக்கான கட்டணம் ரூ.3000. இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும். இவை தவிர ஐ, ஜே, கே கீழ் அடுக்குகள் மற்றும் ஐ, ஜே, கே மேல் அடுக்குகளுக்கான கட்டணம் ரூ.2500. இவற்றை ஆன்லைன் மூலமாகவும், நேரடி விற்பனை மையங்கள் மூலமாகவும் வாங்கலாம். ஆன்லைன் டிக்கெட்களை PAYTM அல்லது www.insider.in என்ற இணையதளம் மூலமாக பெறலாம்.

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து