டிக்கெட் விற்பனை ஆக.25ல் தொடக்கம்

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குவதற்கு 41 நாட்களுக்கு முன்பாகவே, டிக்கெட் விற்பனை ஆக. 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டங்கள் மற்றும் இந்தியா விளையாடாத போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்படும்.

* கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் இந்தியா விளையாட உள்ள பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்களை ஆக.30ல் வாங்கலாம்.

* ஆக.31ல் இந்திய அணியின் 3 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் (ஆஸி.க்கு எதிராக சென்னையில், அக்.8, ஆப்கானுக்கு எதிராக டெல்லியில் ஆக. 11, வங்கதேசத்துக்கு எதிராக புனேயில் அக்.19).

* செப்.1ல் இந்திய அணியின் 3 ஆட்டங்கள் (தர்மசாலா அக்.22 நியூசி.யுடன், லக்னோ அக்.29 இங்கிலாந்து, மும்பை நவ. 2 இலங்கையுடன்).

* செப். 2ல் இந்திய அணியின் 2 ஆட்டங்கள் (கொல்கத்தா நவ. 5 தென் ஆப்ரிக்காவுடன், பெங்களூரு நவ. 12 நெதர்லாந்து).

* செப். 3: இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை (அகமதாபாத், அக். 14).

* செப். 15: அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை.

Related posts

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

இரண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்