திருச்சூரில் ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் கைத்துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு..!!

திருச்சூர்: கேரளத்தின் திருச்சூரில் ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் கைத்துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சூர் நகருக்கு அருகில் உள்ள நாய்க்கானலில் உள்ள உதவி பெறும் பள்ளியான விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர், முன்னாள் மாணவர் மற்றும் முலாயத்தைச் சேர்ந்த ஜெகன் என அடையாளம் காணப்பட்டவர்,  போதைக்கு அடிமையானவர் என்று கருதப்பட்ட ஜெகன், முதலில் பள்ளியின் அலுவலக அறைக்குள் நுழைந்து, ஒரு நாற்காலியை இழுத்து, பின்னர் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஏர் கன்னை எடுத்தார்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டினார். குழப்பத்தின் மத்தியில், ஜெகன் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து மேலே மூன்று ரவுண்டுகள் சுட்டார். பள்ளி நிர்வாகத்தினர் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும், உள்ளூர்வாசிகளின் மற்றும் பள்ளி ஊழியர்களின் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு மாணவனை தாக்கும் நோக்கத்தில் ஜெகன் பள்ளிக்கு வந்துள்ளார். ஜெகனை திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி நடைபெற்று வருகிறது. திருச்சூர் நகர குற்றப்பிரிவு ஏசிபி உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைப்பு

பழனி முருகன் கோயில் மலையடிவார கிரிவலப் பாதையில் தடுப்பு வேலிகள் அமைப்பு

தங்கம் விலையில் மாற்றமில்லை