நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி தோவாளையில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்வு

கன்னியாகுமரி: நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி தோவாளையில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்தது. தோவாளை மலர் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடாமல்லி ரூ.40-ல் இருந்து ரூ.80-ஆகவும், அரளி ரூ.180-ல் இருந்து ரூ.300 ஆகவும், செவ்வந்தி ரூ.160-ல் இருந்து ரூ.250-ஆகவும், பிச்சி பூ கிலோ ரூ.1300-க்கும், மல்லிகை விலை கிலோ ரூ.400, ஒரு தாமரை ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆகவும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்