தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி : ஒரு கிலோ மல்லிகைப்பூ, பிச்சிப்பூ ரூ.180க்கு விற்பனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நடப்பாண்டில் இல்லாத அளவிற்கு விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தோவாளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிற்கு ரூ.500 விற்கப்பட்ட பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக மல்லிகை பூ மற்றும் பிச்சி பூ கிலோ வெறும் ரூ.150 க்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்திருக்கின்றனர். அதே போல எப்பொழுதும் தட்டுப்பாடுடன் இருக்கும் தாழம்பூ ஒன்று 15 மடங்கு விலை உயர்ந்திருக்கிறது. தற்போது ஒரு தாழம்பூ ரூ.30க்கு விற்கப்படுகிறது. சுப முகுர்த்த தினங்கள், கோயில் விழாக்கள் இல்லாததால் பூக்களின் விலை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

மின் உற்பத்தி தொழிற்சாலையில் 64 ஜூனியர் இன்ஜினியர், சர்வேயர்

சைபர் குற்றங்கள்: தென்மண்டல ஐ.ஜி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!