தூத்துக்குடி கன்னியாகுமரி, மதுரை, தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வலியுறுத்தல்

சென்னை: தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று ஆலோசனை நடத்தியது. திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 5வது நாளாக நேற்று காலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. குழுவை சேர்ந்த அமைச்சர்கள் ேக.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் சந்திப்பின் போது, தூத்துக்குடியில் மீண்டும் திமுக வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் ஒரு மனதாக கோரிக்கை விடுத்தனர். பத்தாண்டுகளில் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்கான வாய்ப்பே இந்தத் தேர்தல் என உணர்ந்து பணியாற்றுமாறு கட்சியினரை குழுவினர் கேட்டு கொண்டனர். தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதி நிர்வாகிகள் சந்திப்பின் போது, மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் விதமாக, குமரியில் நாம் பெறுகிற வெற்றி, இமயத்தில் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிடுவோம் என கட்சியினருக்கு குழுவினர் அறிவுறுத்தினர். மாலையில் மதுரை, தேனி தொகுதிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்