தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் லாரியில் இருந்து கொட்டிய உப்பு: பொதுமக்கள் அள்ளி சென்றனர்

ஆறுமுகநேரி: தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் ஆத்தூர் அருகே லாரியில் இருந்து சாலையில் கொட்டிய உப்பை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளி சென்றனர். தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில. நேற்று காலை தெற்கு ஆத்தூர் அருகே சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை லாரியில் இருந்து உப்பு கொட்டியுள்ளது.

சாலையில் இடதுபுறம் முழுவதும் உப்பு கொட்டியதால் அந்த வழியாக சென்ற பைக்குகள், கார்கள் சற்று தடுமாற்றத்துடன் சென்றது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்து சாக்குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உப்பை அள்ளி சென்றனர். மேலும் மணல், உப்பு, ஜல்லி ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தார் பாய் கொண்டு முறையாக மூடி செல்வதற்கு உரிய நடவடிக்கை காவல்துறையினர் எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கு: ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

உ.பி.யில் போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்ட தலித் சிறுவன் உயிரிழப்பு

பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு