தூத்துக்குடி தமாகா வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: ஈரோடு தொகுதிக்கு விஜயகுமார், பெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபால் ஆகியோரை வேட்பாளர்களாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால் தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் என்பவருக்காக திருநெல்வேலி தொகுதியை வாசன் கேட்டார்.

ஆனால் பாஜ ஓதுக்காததால் தற்போது தூத்துக்குடியில் போட்டியிட என்.டி.எஸ்.சார்லஸ், விஜயசீலன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. இந்நிலையில், ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ தூத்துக்குடி வேட்பாளராக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார்’’ என்று அறிவித்துள்ளார்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!