தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற பத்திரிகையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்ததால் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை இங்கு தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? ஊடக செய்திக்கு 3 நாட்களுக்கு பின் பிரேன் சிங் மறுப்பு

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் ஸ்பெயின் அணி

பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்