தூத்துக்குடி, நெல்லையில் ஆய்வு ஒன்றிய குழுவை சேர்ந்த 2 பேர் சென்னை வந்தனர்

சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள, மழை வெள்ள சேதங்களை நேரடியாக ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய குழுவை சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள், நேற்று இரவு டெல்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து, சென்னை வந்தனர். அங்கிருந்தே இரவு 8.20 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். ஒன்றிய அரசின் உயர் அதிகாரியான கர்னல் கே.பி.சிங், டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அவர் விஐபி ஓய்வு அறையில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை இயக்குநர் டாக்டர் கே. பொன்னுசாமி, ஐதராபாத்தில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று மாலை 5.50 மணிக்கு சென்னை வந்தார். அவரும் ஓய்வறையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 8.20 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இருவரும் மதுரை புறப்பட்டு சென்றனர். இவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்