தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து

தூத்துக்குடி: பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக்கை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி சின்னத்துரை ஜவுளி கடை வளாகம், சாலை ஓரங்களில் உள்ள பானிபூரி கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி