தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியின், திமுக வேட்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி 2வது முறையாக போட்டியிடுகிறார். நேற்று காலை தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு வந்த அவர், அரங்கத்தின் முன்புள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைச்சூழ தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர் மாவட்டச் செயலாளர்களான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான லட்சுமிபதியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம் உடனிருந்தனர். வேட்பு மனுத்தாக்கலுக்கு பிறகு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ தூத்துக்குடியில் நேற்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் மக்கள் அளித்த வரவேற்பும், ஆதரவும் திமுகவின் கொள்கைக்கும், திட்டங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். மக்கள் ஒருமித்த குரலில் எங்களது வாக்கு உதயசூரியனுக்குத்தான் என்று தெரிவித்தனர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது’’ என்றார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு