தியாகதுருகம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கி 100 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 325 ஏக்கருக்கும் மேலாக கோ 51 என்ற 110 நாட்கள் கொண்ட நெல் ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில தினங்ககளாக பெய்த கனமழையால் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாரான பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் வயல்வெளிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் நெற்பயிர்கள் மூழுவதும் நீரில் மூழ்கி முளைக்க ஆரம்பித்து விட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் நிலத்தில் இறங்கி பயிற்களை அறுவடை செய்து சாலைகளில் கொட்டி உலர வைத்து பின்னர் இயந்திரதைக் கொண்டு நெல்லை பிரித்தெடுத்தனர். பிரித்தெடுத்த நெல்லை சாலைகளில் கொட்டி உலர வைத்துள்ளனர்.

இதில் ஏக்கருக்கு 10 மூட்டை கூட கிடைக்கவில்லை எனவும், கால்நடைகளுக்கு கூட வைக்கோல் பயன்படாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளன்ர். பயிர்சேதம் குறித்து தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துருவை கேட்டபோது, கூத்தக்குடி கிராம பகுதியில் சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்ய உதவி வேளாண் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் நெற்பயிர்கள் மட்டுமில்லாமல் வேறு ஏதேனும் பயிர்கள் சேதமடைந்துள்னவா எனவும் ஆய்வு செய்வதாக கூறினார். நெற்பயிர்கள் 100 ஏக்கருக்கு மேல் சேதமடைந்துள்ளதால் தமிழக அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை