திருவண்ணாமலையில் குடும்பத்தினருடன் ஆளுநர் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார். நேற்று காலை 7 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதையொட்டி, தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக கோயிலுக்கு வந்தார். அப்போது, கோயில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். கோயிலில் தரிசனம் செய்த ஆளுநருக்கு, திருக்கோயில் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 8.45 மணியளவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது குடும்பத்தினருடன் கிரிவலப்பாதையில் நிருதி லிங்கம் அருகே இருந்து சுமார் 15 நிமிடம் நடந்து கிரிவலம் சென்றார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு