திருவண்ணாமலை அருகே பட்டாசு கடை உரிமையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சிசிடிவி காட்சிகளை வைத்து 7 பேரை தேடும் போலீசார்

திருவண்ணாமலை: ஆரணி அருகே ரூ.5000க்கு பொருட்களை வாங்கி விட்டு பணம் தராமல் பட்டாசு கடை உரிமையாளரை தாக்கிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காட்டுகாநல்லூர் கிராமத்தை சேர்ந்த குழி தொழிலாளி தங்கராஜ் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற உறவினர்கள் 7 பேர் ஆரணி அருகே கண்ணமங்கலம் டவுன் பழைய வீதியில் அசிம் என்பவரின் பட்டாசு கடைக்கு சென்று ரூ.5000 மதிப்பிலான பட்டாசுகளை வாங்கியுள்ளனர்.

ஆனால் அதற்கு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளர் அசீமை கடுமையாக தாக்கி உள்ளனர். கடையில் இருந்த அவசர தீயணைப்பான் கருவி மற்றும் கட்டைகளை கொண்டு பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த மோதலில் காயமடைந்த கடை உரிமையாளரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதை அடுத்து வியாபாரி அசீம் கொடுத்த புகாரின் பேரில் காணாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய 7 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!