திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பிலான கடைகள் மீட்பு

சென்னை: சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான கடைகள் மீட்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளத திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், இன்று (24.07.2023) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான 4 கடைகள் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

இதில் வணிக பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. 4 கடைகளின் வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள். வாடகைதாரர்கள் மீது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு -78 -ன் படி வழக்கு தொடரப்பட்டு, அதன் உத்தரவுப்படி சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் முன்னிலையில் வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் மேற்குறிப்பிட்ட 4 கடைகளும் இன்று (24.07.2023) பூட்டி சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதினம் பெறப்பட்டது.

இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.2.50 கோடியாகும். இந்நிகழ்வின்போது, திருக்கோயில் செயல் அலுவலர் ம.சக்திவேல், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி