திருவனந்தபுரத்தில் கழிவு நீர் கால்வாயை சுத்தப்படுத்தியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதி வழியாக ஆமயிழஞ்சான் தோடு என்ற கழிவு நீரோடை செல்கிறது. 3 நாட்களு முன் இந்த கழிவுநீரோடையை சுத்தம் செய்து கொண்டிருந்த ஜோய் என்ற ஊழியர், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று அந்த ஊழியரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரு நாட்களாக தேடியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கொச்சியிலிருந்து கடற்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 7 பேர் அடங்கிய குழு நேற்று காலை முதல் ஜோயை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று காலை 8.45 மணியளவில் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ஜோயின் உடல் கழிவு நீரோடையில் குப்பைகளுக்கு இடையே சிக்கிக் கிடப்பது தெரியவந்தது. அதைப் பார்த்த ஒரு துப்புரவு தொழிலாளி உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோய் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதக்கிடங்கு அருகே நின்று கொண்டிருந்த மேயர் ஆர்யா ராஜேந்திரன், கடுமையாக முயற்சித்தும் ஜோயை காப்பாற்ற முடியவில்லையே என்று கூறி கதறி அழுதார்.

Related posts

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் இணையும்: அடித்து சொல்கிறார் ஓபிஎஸ்

நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என கேட்ட நிலையில் ‘கூல் லிப்’நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மது ஒழிப்பு மாநாடு ராமதாசுடன் கசப்பான அனுபவம் இருப்பதால் அழைக்கவில்லை: விசிக துணை பொதுச்செயலாளர் விலக்கம்