திருவள்ளுவர் விருது உள்பட73 விருதுகளுக்கு ஆக.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: திருவள்ளுவர் விருது உள்பட 73 விருதுகளுக்கு அறிஞர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகிறது. அவ்வகையில் எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2024ம் ஆண்டுக்கான 72 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிஞர்கள் www.tamil valarchithurai.tn.gov.in/awards என்ற இணைய தளங்களின் வழியாகவோ http://awards.tn.gov.in அல்லது www.tamilvalachithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது. தமிழ்ச் செம்மல் விருதிற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அம்ரித் பாரத் திட்டத்தில் கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு: செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

ஹத்ராஸ் நெரிசல் வழக்கில் 6 பேர் கைது பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு