திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு..!!

கன்னியாகுமரியில் இன்று காலை ரூ37 கோடியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலம் அமைக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு அரசு ரூ4 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 சொகுசு படகுகளை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வழங்கியது. அதன்படி 2 சொகுசு படகுகளையும் படகு துறையிலிருந்து வட்டகோட்டை வரை சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related posts

காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..!!

போருக்கு நடுவே அல்லப்படும் லெபனான் மக்கள் : ஊரை காலி செய்யும் அவலம்!!

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி