திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள் நியமனம்

திருவள்ளூர்: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகளை மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக புங்கத்தூர் டி.சிவக்குமார், துணைத் தலைவராக திருத்தணி டி.ரகுநாதன், அமைப்பாளராக ராஜாஜிபுரம் வி.எஸ்.நேதாஜி, துணை அமைப்பாளர்களாக ஒண்டிக்குப்பம் கே.ஏ.மதியழகன், கொட்டையூர் ஆர்.கார்த்திகேயன், ஜெயா நகர் ஆ.கோபி, எரும்பி ஜி.கே.அரி, புதுமாவிலங்கை ஆர்.வாசு, அம்சா நகர் என்.கேசவன், மணவாளநகர் பி.ஆர்.பிரபாகரன், பூண்டி பால்ராஜ், கீழச்சேரி எஸ்.ஜெயவேல், திருவள்ளூர் கே.ஜி.ஆர்.ராஜேஷ்குமார், அத்திமாஞ்சேரிபேட்டை ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்