திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவு சார் நகரம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 1,703 ஏக்கர் பரப்பளவில் ‘அறிவுசார் நகரம் திட்டம்’ கொண்டு வரப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த நகரம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன அறிவு சார் நகரத்தில், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள், அறிவுசார் தொழிலகங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் கிராம மக்கள் மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கலாம். இந்த ஆட்சேபனை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் ஆக.22ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு