திருத்தணி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் இணைப்பு துண்டிப்பு

திருத்தணி: சென்னை துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று சரக்கு ரயில் 20 பெட்டிகளுடன் நிலக்கரி நிரப்பிக் கொண்டு அரக்கோணம் மார்க்கத்தில் மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் மாலை 7 மணி அளவில் திருத்தணி ரயில் நிலையம் அருகில் சிக்னலுக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்து கொண்டிருந்தது. இதில், சிக்னல் கிடைத்தவுடன் இன்ஜின் டிரைவர் சரக்கு ரயில் இயக்கினார். அப்போது ஐந்து ரயில் பெட்டிகளுடன் இணைப்பு(கப்ளிங்) துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் நின்றது.

இதையறிந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஜின் டிரைவர் மற்றும் காட் துண்டிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ரயில் இன்சின் டிரைவர் ரயில் பெட்டி இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related posts

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை