திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு வைரஸ் தொற்று பாதிப்பு: 3 நாள் ஓய்வு எடுக்க அறிவுரை

திருப்போரூர்: திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர், தஞ்சாவூர் சென்றார். ஆய்வு பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று காலை அவர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டார். அதோடு டெங்கு பரிசோதனையும் செய்தார்.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு “டெங்கு” தொற்று ஏற்கனவே வந்து சென்றதும், இன்னமும் வைரஸ் தொற்று இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் இன்னும் 3 நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும் தட்டணுக்கள் அதிகரிக்கும் உணவும், நீர் அதிகம் உட்கொள்வதும் அவசியம் என வலியுறுத்தினர். மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல்நலம் சரியானதை உறுதிப்படுத்தி பணிக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், ‘‘இன்னும் 3 நாட்களுக்கு எனது அன்றாட பணிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வருகிற 3ம் தேதி முதல் எனது வழக்கமான பணி தொடரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்