திருப்பாலைவனம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் ஆய்வு: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: திருப்பாலைவனம் ஊராட்சியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்று, கிராம மக்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். பின்னர், அந்த மனுக்கள்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அம்மனுக்கள்மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய திருப்பாலைவனம் ஊராட்சியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருப்பாலைவனம், மெதூர், பெரும்பேடு, ஆவூர், வஞ்சிவாக்கம் உள்பட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர். இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமை தாங்கி, முகாமை பார்வையிட்டார். பின்னர் கிராம மக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 100க்கும் மேற்பட்ட மனுக்களை துரை சந்திரசேகர் எம்எல்ஏ பெற்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் 18 அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, இம்மனுக்கள்மீது உரிய ஆய்வு நடத்தி, விரைவில் தீர்வு காணவேண்டும் என்று துரை சந்திரசேகர் எம்எல்ஏ அறிவுறுத்தினார். இதில் மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜி.ரவி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், குமார், மேலாளர் லீல்பிரசாத், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு