திருமங்கலத்தில் உள்ள கடையில் லெமன் ஜூசில் பிளாஸ்டிக் நூல்: 2 ஆயிரம் அபராதம் விதிப்பு

அண்ணாநகர்: திருமங்கலத்தில் உள்ள கடையில் ஜூஸ் குடித்தபோது பிளாஸ்டிக் நூல் கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(46). இவர் திருமங்கலத்தில் உள்ள கடையில் லெமன் ஜூஸ் சாப்பிட்டபோது பிளாஸ்டிக் கவர் நூல் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடை ஊழியர்களிடம் கேட்டபோது அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்ததும் உரிமையாளர் தனபால் வந்து விசாரித்துவிட்டு வாடிக்கையாளரை எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து பா திக்கப்பட்ட வாடிக்கையாளர் திருமங்கலம் போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்துவிட்டு லெமன் ஜூஸில் கிடந்த பிளாஸ்டிக் கவர் நூலை படம் பிடித்து உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கார்மேகம், ஜூஸ் கடைக்கு வந்து ஆய்வு செய்தார். ஜூஸ் போட வைத்திருந்த பழங்கள் மீது தூசி படர்ந்திருந்தது. பிளாஸ்டிக் கவர்கள் குப்பைபோல் குவித்து வைத்து இருந்தனர். டீ தூளை சோதனை செய்தபோது கலப்படமாக இருந்தது. குடிதண்ணீர் கேன் பாசி படிந்து காணப்பட்டது. இதையடுத்து கடையை சுத்தமாக வைத்துக்கொள்ளாததற்காக ஜூஸ் கடைக்கு 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு