திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூர் பகுதியில் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டி.குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே எவ்வித அனுமதியும் இன்றி சிலர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் மணல் கடத்தி வந்தவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து தனிப்படை போலீசார், மணல் கடத்திய மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு..!!