திருக்கோவிலூர் அருகே 100 நாள் கூலி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே 100 நாள் வேலை செய்ததற்கு கூலி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 3 மற்றும் 4வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த மூன்று வாரமாக 100 நாள் வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் பத்து நாட்களுக்கு மேலாகியும் இதுவரை செய்த வேலைக்கு கூலி தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென நேற்று காலை அரசு பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உரிய பதிலளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையேற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் திருக்கோவிலூர்-கண்டாச்சிபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!