திருக்கழுக்குன்றம் ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு பட்டா, உதவித்தொகை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு பட்டா, உதவித்தொகைக்கான ஆணைகளை எம்எல்ஏ பாலாஜி வழங்கினார். திருக்கழுக்குன்றம் தாலுகாவில், கடந்த 12ம் தேதி ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெரும்பூர் குறுவட்டத்திற்கான (முதல் நாள்) ஜமாபந்தி நேற்று முன்தினம் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு தலைமை தாங்கினார். தாசில்தார் ராதா, துணை தாசில்தார்கள் சத்யா, நாராயணன், நெரும்பூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலி பூதத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, நெரும்பூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட நெரும்பூர், பட்டரை கழனி, நல்லாத்தூர், பொம்மராஜபுரம், பனங்காட்டுசேரி, அட்டவட்டம், இரும்புலிசேரி, வீராபுரம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், பட்டா திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை என தங்களின் பல்வேறு தேவைகள் குறித்த மனுக்களை ஜமாபந்தியில் வழங்கினர்.  ஜமாபந்தியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா, இயற்கை மரணமடைந்த குடும்பத்தினருக்கு காசோலை, விபத்து நிவாரண நிதி, குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்கி பேசினார். இதில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்