திருக்கழுக்குன்றத்தில் அரசு பள்ளி பவள விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் கடந்த 1949ம் ஆண்டு, ஜூலை 2ம் தேதி 175 மாணவர்களுக்கு அரசு பள்ளி துவங்கப்பட்டது. திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 7 பேர் இலவசமாக வழங்கிய சுமார் 9 ஏக்கர், 13 சென்ட் நிலத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. 1978ம் ஆண்டு இப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு இருபாலரும் கல்வி பயின்று வந்த நிலையில், கடந்த 1998ம் ஆண்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. 2015ம் ஆண்டு ஆங்கிலவழி கல்வி துவங்கப்பட்டது. இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

இப்பள்ளியில் பயின்ற ஒருவர் எம்பியாகவும், 4 பேர் எம்எல்ஏவாகவும் இருந்துள்ளனர். இப் பள்ளியின் 75ம் ஆண்டு பவள விழா நேற்று மாலை பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், நிலம் வழங்கியவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்து கேடயம் ற்றும் பரிசுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். திருக்கழுக்குன்றம் வியாபாரிகள் சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் துணை சேர்மன் பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரவி, பெற்றோர்-ஆசிரியர் குழு இணை செயலாளர் சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

74000 பேர் பனிலிங்க தரிசனம்

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்