அனல் மின் நிலையத்தில் காப்பர் கம்பிகள் திருட்டு

*5 பேர் கைது

நெய்வேலி : என்எல்சி அனல் மின் நிலையத்தில் காப்பர் கம்பிகள் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி என்எல்சி இரண்டாம் அனால் மின் நிலையத்தில், மத்திய தொழிலாக பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனல் மின் நிலைய குடோன் பகுதியில் சிலர் காப்பர் கம்பிகளை திருடி கொண்டிருந்ததை பார்த்து பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை பிடித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நெய்வேலியை அடுத்த ஆதண்டார்கொல்லை பகுதியை சேர்ந்த சுப்பராயன் மகன் சதீஷ்(35), மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஏசுராஜ் மகன் ஜான் பெர்னாண்டஸ்(31), பழைய தாண்டவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் பாலமுருகன்(31), தொப்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் குணசீலன்(22) மற்றும் முத்துமணி(22) என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள 22 மீட்டர் காப்பர் வயரை பறிமுதல் செய்தனர்.

Related posts

திருப்பத்தூர் அருகே 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..!!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் 2 போட்டிகளில் விளையாடும் 3 வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு

சென்னையில் ஜூலை 7இல் மகளிருக்கான கார் பேரணி..!!