கல்வி என்பது நமது தலைமுறையை முன்னேற்றுவதற்கான அச்சாரம்; பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்ககூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கல்வி என்பது நமது தலைமுறையை முன்னேற்றுவதற்கான அச்சாரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரி 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; எவ்வளவு பணி இருந்தாலும், கொளத்தூர் தொகுதிக்கு வந்து, உங்கள் முகத்தையெல்லாம் பார்த்தால்தான், எனக்குப் புது எனர்ஜியே ஏற்படுகிறது. தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சர். ஆனால், உங்களுக்கு நான் சட்டமன்ற உறுப்பினர். உங்களுடைய அன்பால்தான், உங்களுடைய பேரன்பால்தான், உங்களுடைய வாழ்த்துகளோடுதான் நான் ஹாட்ரிக் வெற்றி பெற்றேன்.

மூன்றுமுறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக என்னை இந்த தொகுதியில் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் எல்லாம் என்னை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுத்த காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இந்த அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, கடந்த 2.11.2021 அன்று நான் தொடங்கி வைத்தேன். இது தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், 685 மாணவ மாணவிகள் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே, இந்தக் கல்லூரி எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

நன்றாக சொல்லி தருவதால்தான், பெற்றோர்களும் தேடி வந்து, உங்களை இங்கே சேர்த்திருக்கிறார்கள். முதல் வருடம் 240 பேர் சேர்ந்தார்கள். அடுத்த வருடம் மாணவர்களுடைய எண்ணிக்கை 480 ஆனது. இப்போது 685. ஆனால், அட்மிஷன் கேட்டு வருகின்ற விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இதுதான் இந்தக் கல்லூரியுடைய வெற்றி. மிகப் பெரிய வெற்றி. நமது திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. மாணவர்கள் நன்றாக படிக்கவே திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகுதான் கல்வி கிடைக்கிறது. கல்வி என்பது நமது தலைமுறையை முன்னேற்றுவதற்கான அச்சாரம். குறிப்பாக பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்ககூடாது என்பதற்காகவே இந்த திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் கண்ட கனவுகளை நிறைவேற்றி வருகிறேன். எத்தனையோ போராட்டங்களுக்குப் பிரகுதாள் கல்வி கிடைக்கிறது. பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனமுடன் இருக்கிறது இவ்வாறு கூறினார்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்