கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி தடையை நீக்கும் திட்டமில்லை

புதுடெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, கடந்த 2022 மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கும், கடந்த ஆண்டு ஜூலையில் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கும் ஒன்றிய அரசு தடை விதித்தது. இதே போல, கடந்த ஆண்டு அக்டோபரில் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கோதுமை, அரிசி, சர்க்கரை மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

அதே போல, கோதுமை, சர்க்கரையை இறக்குமதி செய்யும் திட்டமும் இல்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இந்த தடை நீடிக்கும் போதிலும், இந்தோனேசியா, செனகல் மற்றும் காம்பியா போன்ற நட்பு நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைக்காக இந்தியா அரிசி வழங்கி வருகிறது’’ என்றார்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்