தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்

*சங்கரன்கோவில் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு

சங்கரன்கோவில் : தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். தென்காசி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிமுக கூட்டம் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கலைஞர் திடலில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது.

சதன் திருமலை குமார் எம்எல்ஏ, தனுஷ் குமார் எம்பி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளர் செண்பக விநாயகம், வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், திமுக தொகுதி பொறுப்பாளர்கள் நல்ல சேதுபதி, இன்பா ரகு, கூட்டணி கட்சி மாவட்டச் செயலாளர்கள் மதிமுக சுதா பாலசுப்பிரமணியன், விசிக லிங்க வளவன், மார்க்சிஸ்ட் முத்துப்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிதுரை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பட்டாணி, தமுமுக யாஹூப், ஆதிதமிழர் கட்சி ஆதவன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சுப்பிரமணியன், தமிழக வாழ்வுரிமை கட்சி கணேசன், திராவிட தமிழர் கட்சி மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகர், மனிதநேய ஜனநாயக கட்சி அஜ்மீர், மக்கள் நீதி மய்யம் அய்யாசாமி முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் ‘‘மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 511 திட்டங்களில் 33 மாதங்களில் 90% திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில் ‘‘மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. பாஜ, அதிமுக கூட்டணி வலுவில்லாமல் உள்ளது. அவர்கள் தினசரி ஒரு அறிக்கை விட்டு விட்டு என்ன செய்கின்றோம் என்பதை தெரியாமல் உள்ளனர். வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக தென்காசி தொகுதியில் போட்டியிடும் ராணி  குமாரை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, கிறிஸ்டோபர், பொன் முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன், சேர்மத்துரை, பெரியதுரை, வெள்ளத்துரை, ராமச்சந்திரன், அன்பழகன், பால்ராஜ், புளியங்குடி நகரச் செயலாளர் அந்தோனிசாமி, பேரூர் செயலாளர்கள் மாரிமுத்து, ரூபி பாலசுப்பிரமணியன், குருசாமி, சேது சுப்பிரமணியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, பொதுக்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், சாகுல் ஹமீது, மகேஸ்வரி பராசக்தி,

மாரிசாமி, வேல்சாமிபாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, நகர துணைச் செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், நகர பொருளாளர் லாசர், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, டைட்டஸ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி முகேஷ், வழக்கறிஞர் அணி பிச்சையா, மாணவர் அணி உதயகுமார், மகளிர் அணி சிவசங்கரி, சிறுபான்மையினர் அணி நாகூர் ஹனி, பொறியாளர் அணி பசுபதி பாண்டியன், மருத்துவர் அணி மணிகண்டன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், தகவல் தொழில் நுட்ப அணி கிப்ட்சன், விவசாய அணி துணைத்தலைவர் மாடசாமி, விவசாயத் தொழிலாளர் அணி சேதுராமன்,

முருகராஜ், சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன், அண்ணாமலை, வக்கீல்கள் அன்புச் செல்வன், கண்ணன், ஜெயக்குமார், காளிராஜ், சதீஷ், மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, ஜலால், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், சங்கர் ராஜ், திட்டச் செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், கார்த்தி, ராஜ், அன்சாரி, ராஜராஜன், மணிகண்டன், சரவணன், குவளைகண்ணி மகேஷ் குமார், செல்வின், வீராசாமி, வீரமணிகண்டன் காவல் கிளி, யாசர், செந்தில், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு