தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியதா அமமுக ..!!

தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அதிமுக அலுவலகத்தை அமமுக கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் அதிமுக, அமமுக இரு தரப்பினரும் கூட்டங்களை நடத்துவோம் எனக் கூறியதால் யாரும் செல்லக் கூடாது என காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளாக கூட்டம் ஏதும் நடத்தப்படாமல் இருந்த அலுவலகக் கட்டடத்தில் இன்று அமமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்பட்ட கட்டடத்தில் அமமுக கூட்டம் நடத்தப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்