மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை விதிப்பு

நெல்லை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகள் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் 3 நாட்களாக கனமழை பெய்தது.

இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் தேவதானப்பட்டி வனசரகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது