பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன்

நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 23ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி