கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம் ஜார்கண்ட் எம்பி.யிடம் விளக்கம் கேட்கிறது காங்.

ராஞ்சி: வருமான வரித்துறை பறிமுதல் செய்த கணக்கில் வராத பணம் குறித்து காங்கிரஸ் எம்பி.யிடம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுத் மதுபான நிறுவனம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது. இதன் போது, ஜார்கண்ட் காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.290 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிர்சா முண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே, “காங்கிரஸ் எம்பியாக இருப்பதால் தீரஜ் சாஹுவிடம் எங்கிருந்து அவருக்கு இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. மற்றபடி, இது அவருடைய தனிப்பட்ட விவகாரம். இதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

* இதுவரை எண்ணிய தொகை ரூ.300 கோடியை கடந்தது…

ஜார்கண்ட் எம்பி. வீட்டில் இருந்து கட்டு கட்டாக பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். இதுவரை எண்ணியதில், இத்தொகை தற்போது ரூ.300 கோடியை கடந்துள்ளது. இன்னும் எண்ணப்பட வேண்டிய பணக் கட்டுகள் நிறைய இருப்பதாக தகவல் அறிந்த வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* இதற்கு முன்பு அதிக பட்சமாக…

* கான்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தொழிலதிபரிடம் இருந்து கடந்த 2019ல் ரூ.257 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

* தமிழ்நாட்டில் சாலை கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கடந்த 2018ல் ரூ.163 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு