கார் உதிரி பாகங்கள் திருட்டு


பொன்னேரி : மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் வசித்து வருபவர் காதர் பாட்ஷா (43). இவர் மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் சொந்தமாக கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கார் ஷெட்டை திறக்க வந்துள்ளார். அப்போது அங்கு மொத்தம் 7 கார்கள் பழுது சரிபார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காதர் பாட்ஷா அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, காரை திறந்து பார்த்தபோது காரில் இருந்த டிஜிட்டல் மீட்டர், ஏசி, பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தன. அவைகளின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காதர் பாட்ஷா மீஞ்சூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், எஸ்.ஜ ஐசக் பாக்கியநாதன் சம்பவ இடத்திற்கு நேற்று வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர், வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்