தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ. 250 வரையும் , ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும்.

பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் அனுமதி தர வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் என்று கட்டுப்பாடு இல்லாமல் படங்களை திரையிட அனுமதி அளிக்க வேண்டும். மால்களில் உள்ள திரையரங்குகளில் வர்த்தக செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கியது போல, மற்ற திரையரங்குகளுக்கும் இந்த அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்