Sunday, September 29, 2024
Home » ரயிலின் ஜெனரல் கோச்சில் பரிதாபம்: சூப்பர்மேனாக மாறி கழிப்பறைக்கு தாவிச் சென்ற இளைஞர்

ரயிலின் ஜெனரல் கோச்சில் பரிதாபம்: சூப்பர்மேனாக மாறி கழிப்பறைக்கு தாவிச் சென்ற இளைஞர்

by Neethimaan

கோடைகால சீசன் என்பதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், மூச்சு விடுவதற்கு கூட இடமில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில வழித்தட ரயில்களில், ஸ்லீப்பர் கோச்சில் கூட நிற்கவும் இடமின்றி மக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் ரயிலில் இருக்கும் கழிவறைக்கு செல்வதற்காக ஒருவர் ‘சூப்பர்மேன்’ போல் தாவித்தாவி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயில் பெட்டியின் கேலரியில் கூட மக்கள் நிற்க முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடந்து சென்று கழிப்பறைக்கு செல்ல வழியில்லாததால், பயணி ஒருவர் தனது இருக்கையில் இருந்து மற்றொரு இருக்கைக்கு தாவித் தாவிச் சென்று கழிவறைக்கு செல்ல முயல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்களில் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற சூழ்நிலைகளை நானும் அனுபவித்தேன். அவர் இளைஞனாக இருப்பதால் தாவி தாவி சென்று கழிப்பறையை அடைந்தார். ஆனால் வயதானவர்கள், குழந்தைகள், பெண்களின் நிலையை நினைத்தால், ஜெனரல் கோச்சில் பயணம் செய்வது என்பது கொடுமையானது’ என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

20 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi