பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. அதிரடி கைது


நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. அதிரடியாக கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், விவசாயி. இவரது மனைவி தீபா (43). இவர் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.கொந்தளம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர், தனது பூர்வீக நிலத்தின் பட்டாவில், பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மனு செய்திருந்தார். அந்த பெயரை மாற்றம் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலர் தீபா ₹25,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, நேற்று ஜெகநாதன், கிராம நிர்வாக அதிகாரி தீபாவிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தீபாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்