மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் 50 ஆண்டுகள் பழமையான காட்டுவான் மரம் முறிந்து விழுந்தது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான காட்டுவான் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ஜூனன் தபசு, கிருஷ்ணா மண்டபம் அமைந்துள்ளது. எப்போதுமே, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், மேற்கு ராஜ வீதியில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான காட்டுவான் மரம் ஒன்று நேற்று மதியம் திடீரென முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

அப்போது, சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாமால் சாலையில் விழுந்து கிடந்த காட்டுவான் மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டு, துண்டுகளாக அறுத்து அப்புறபடுத்தினர்.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!